
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டு பொருளாகி விட்டதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க மேலும் ஓராண்டு தேவை என்று ஆணையம் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீட்டு கோரிக்கையின் தீவிரம் புரியாமல் கால்பந்து போல அரசும், ஆணையமும் உதைத்து ஆடுவது கண்டிக்கதக்கது என குறிப்பிட்டுள்ள ராமதாஸ், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு சமூகநீதியை அரசு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.