உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி ?

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி ?

தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாட்டையை எடுக்கவில்லை என்பதில் உண்மை இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றங்கள் நடைபெறுவதை வேடிக்கை பார்க்காமல் தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். இடைத்தேர்தலுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலளிக்காமல் நைசாக அங்கிருந்து நழுவினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com