”சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை ஒரு கூட்டம் மறைத்து வருகிறது” - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டினார்.

”சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை ஒரு கூட்டம் மறைத்து வருகிறது” - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டினார்.

சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவரது தியாகங்களை மறைப்பதற்கு ஒரு கூட்டம் முயற்சி செய்து வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு ஒரு மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன் என்று புகழாரம் சூட்டினார். மேலும், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் தியாகங்களை ஒரு கூட்டம் மறைத்து வருகிறது ஆனால் மனிதர்கள் உள்ளவரை முத்துக்கோன் புகழ் நிலைக்கும் என்றார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com