மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்...!

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா மையத்தில் ஏற்பாடுகள் தீவிரம்...!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணிவரை மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இதில், தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல நாட்டுப்புற கலைஞர் வேல்முருகன், ராஜஸ்தானி நாட்டுப்புற கலைஞர் மாமே கான் மற்றும் கேரளா, மேற்குவங்கம் என பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இசை கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.  

இந்த நிகழ்ச்சிகள் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலான சத்குரு தமிழ்  உட்பட தமிழ், இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகள் இந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளன. 

இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com