விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து...300-வது நாளாக ஏரியில் இறங்கி போராட்டம்...!

விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து...300-வது நாளாக ஏரியில் இறங்கி போராட்டம்...!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 4 ஆயிரத்து 791 ஏக்கர் பரப்பளவில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து கிராம சபை கூட்டங்களிலும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து  தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளனர். 

இந்நிலையில் போராட்டத்தின் 300 ஆவது நாளை ஒட்டி ஏரி,குளம், கால்வாய் உள்ளிட்ட நீர் நிலைகளையும், நீர் ஆதாரங்களையும் அழிக்கும் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏகனாபுரம் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com