திருவண்ணாமலையில் நாளை பாஜக சார்பில் போராட்டம் அறிவிப்பு - அண்ணாமலை

திருவண்ணாமலையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பாஜக சார்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி சிப்காட் அமைக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து போராட்டம் நடத்திய 20 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்து திருவண்ணாமலையில் நாளை பாஜக சார்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com