ராகுல் காந்தி பதவி நீக்கம் - விமானநிலையம் முற்றுகை போராட்டம்

ராகுல் காந்தி பதவி நீக்கம் - விமானநிலையம் முற்றுகை போராட்டம்
Published on
Updated on
1 min read

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் லெனின் பிரசாத் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை குறித்து அவதூறாக பேசியதற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

இதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பலகட்ட போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர்

தமிழகத்திலும் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னை விமான நிலையத்தை இளைஞர் காங்கிரஸை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் முற்றுகையிட்டனர்

அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் மீறி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற காங்கிரஸரை தடுப்பு காவலில் காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com