ஆந்திரா விபத்துக்கு பின் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை..!

ஆந்திராவில் ரயில் விபத்த ஏற்பட்ட இடத்தில், சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் ரயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கண்டகப் பள்ளி ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 14 பேர் மரணமடைந்த நிலையில் சுமார் 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில்,. நேற்று காலை முதல் விபத்தில் சிக்கிய ரயில் பெட்டிகளை அகற்றி ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.

நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் பின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, சோதனை ஓட்டத்தில் ரயில் பாதை போக்குவரத்துக்கு தகுதியுடன் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு முதல் விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள மூன்று ரயில் பாதைகளிலும் ரயில் போக்குவரத்து துவங்கி நடைபெற்று வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com