அமைச்சரின் பேச்சை கண்டு கொள்ளாத ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்....!!

அமைச்சரின் பேச்சை கண்டு கொள்ளாத ஆளும் கட்சி எம்எல்ஏக்கள்....!!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலம் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கி பேசுகையில், திமுக ஆட்சியில் தான் பெண்களுக்கு பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது எனவும் விதவை மறுமண நிதி உதவி திட்டம், கட்டணமில்லா பேருந்து வசதி, மகளிர் குழுக்களுக்கு சுயதொழில் கடனுதவி என பெண்களுக்கென பல எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள் எனவும் கூறினார்.

மேலும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முழுமையாக குடிநீர் வழங்க முடியவில்லை எனவும் இராமநாதபுரம் மாவட்டத்திற்கென தனி கூட்டு குடிநீர் திட்டம் வழங்க அறிவித்து  ரூ.2ஆயிரத்து 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து காவிரி ஆற்றுப்பகுதியில் தனியாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் கூறிய அவர் இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தேவை முழுமையாக நிறைவேறும் எனத் தெரிவித்தார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் சிறப்புரை ஆற்றிய போது மேடையில் அமர்ந்திருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர்  ஊராட்சி பிரநிதிகள் சிரித்து  பேசியபடியே இருந்தனர். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்ட மன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இருவருக்கும் பனிப்போர் இருந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் பேச்சை மேடையில் அமர்ந்திருப்பவர்கள் கண்டுகொள்ளாமல்  இருந்தது  அமைச்சரின் ஆதரவாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com