சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து வேதனை அளிக்கிறது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து வேதனை அளிக்கிறது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on: 
Updated on: 
1 min read

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்"சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டிக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com