குடிநீர் திட்டம் குறித்து எம்.பி.ஆ.ராசா ஆய்வு...!

கோவையில், மக்களுக்கு குடிநீர் வழங்க விளாமரத்தூர் பகுதியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க விளாமரத்தூர் பகுதியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் மேட்டுப்பாளையம் சென்றுள்ள நீலகிரி தொகுதி எம்.பி.ஆ.ராசா, குடிநீர் எடுக்கப்படவுள்ள விளாமரத்தூர் பவானி ஆற்றங்கரைப் பகுதியை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேட்டுப்பாளையம் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டிற்குள் இத்திட்டத்தை முடிக்க ஆவண செய்யுமாறு முதலமைச்சரிடம் வலியுறுத்த உள்ளதாக கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com