தமிழ்நாடு வேளாண் பல்கலை. நுழைத்தேர்வு திடீர் ரத்து

தமிழ்நாடு வேளாண் பல்கலை. நுழைத்தேர்வு திடீர் ரத்து

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் 2024-25ஆண்டுக்கன முதுநிலை பட்டப்படிப்புக்காக ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. இவைகளில் முதல்நிலை படிப்பில் சேர்வதற்காக மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவர்கள் செலுத்திய விண்ணப்ப கட்டணம் திருப்பி அனுப்படும் என்றும் மீண்டும் நுழைவுத் தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com