தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு...வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு...வானிலை மையம் அறிவிப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த மூன்று நாள் :

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த மூன்று நாட்கள் அதாவது 07.02.2023 முதல் 10.02.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com