முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை...முதலமைச்சர் பெருமிதம்!

முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலை...முதலமைச்சர் பெருமிதம்!

இந்தியாவிலேயே முதலீட்டை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் 762.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.  பின்னர் விழாவில் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்றும் கூறினார். 

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 33 ஆயிரத்து 296 ஆக உயர்ந்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார். மேலும், 47 லட்சத்து 14 ஆயிரத்து 148 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதலாக 5 ஆயிரத்து 140 மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயனடைய உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com