அவதூறு பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்....!!!

அவதூறு பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும்....!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை நீக்கம் செய்யக்கோரியும், வழக்கு தொடுப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரிடம் 22 தமிழ்த்தேசிய அமைப்புகள் ஒன்றிணைந்து மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர். 

நடந்து முடிந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் நிலையங்களில் போடப்பட்ட அவதூறு பொய் வழக்கு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை தலைமை இயக்குனரிடம் கோரிக்கை மனுவை வழங்கி இருப்பதாக தெரிவித்தார். 

பட்டியலின சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஏழை மக்களை தூண்டிவிட்டு வன்முறைக்கு துணை போகும் சமூக விரோத சக்திகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com