”சனாதன தா்மத்தை ஒழிக்கும் தீா்மானம் கொஞ்சமும் குறையாது” - உதயநிதி ஸ்டாலின்

”சனாதன தா்மத்தை ஒழிக்கும் தீா்மானம் கொஞ்சமும் குறையாது” - உதயநிதி ஸ்டாலின்

சனாதன தர்மத்தை திராவிட மண்ணில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் கொஞ்சமும் குறையாது என அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 

சனாதன தா்மத்தை ஒழிக்கும் தீா்மானம் குறையாது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், காவிகளின் மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என தொிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவது போல், பல சமூகக் கேடுகளுக்கு சனாதன தர்மம் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளாா். 

மேலும், சனாதன தர்மத்தை திராவிட மண்ணில் இருந்து ஒழிக்க வேண்டும் என்ற தீா்மானம் ஒருபோதும் குறையாது எனவும் பதிவிட்டுள்ளாா்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com