"நாடாளுமன்ற தேர்தலி திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"நாடாளுமன்ற தேர்தலி திமுக கூட்டணி வெற்றிபெற பாடுபட வேண்டும்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் வலியுறுத்தியுள்ளார். 

திண்டிவனம் அடுத்த இரட்டனையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மயிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் முகவர்களின் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கழக செயலாளரும், சிறுபான்மை பிரிவு நலன் அமைச்சருமாகிய செஞ்சி. மஸ்தான் கலந்துக் கொண்டு கட்சி நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு அச்சாரமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் அமைவதோடு,  நமது தமிழக முதல்வர்  மு க ஸ்டாலின் யாரை கை காட்டுகின்றாரோ அவரே இந்தியாவின் பிரதமராக அமருவதற்கு நாம் அயராது பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com