திமுக எம்பி-க்கள் கூட்டம் நாளை சென்னையில் நடைபெரும்..!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் சனிக்கிழமை (நாளை)  சென்னையில் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில்
எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com