தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு...வானிலை மையம் தகவல்!

தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு...வானிலை மையம் தகவல்!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com