மருத்துவமனையில் சுற்றி திரியும் தெருநாய்கள்

சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அச்சுறுத்தல்களோடு துரத்தும் தெரு நாய்கள்
மருத்துவமனையில் சுற்றி திரியும் தெருநாய்கள்

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சுற்றி திரியும் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள், சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை அச்சுறுத்தல்களோடு துரத்தும் காட்சிகளை நோயாளிகள் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தலைமை மருத்துவமனையின் புற நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் ஆண்கள் சிகிச்சை பிரிவிற்கு செல்லும் மருத்துவமனை வளாகத்தில் சமீப காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவமனை வளாகத்திற்குள் சுற்றித்திரியும் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் மருத்துவமனைக்கு வருபவர்களை அச்சுறுத்தும் விதமாக துரத்தி தொல்லை அளித்து வருகின்றன. எனவே தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com