”அமைச்சர்கள் களத்திற்கு வந்ததால் தான் பிரச்னை தீரும்” - அண்ணாமலை

Published on

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் களமிறங்கினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மிக்ஜாம் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மழைநீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தார். பல கோடி ரூபாய் இழப்பை எதிர்கொண்டுள்ள தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு, சென்னை வருகை தரும் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார்.

அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு நாள் ஊதியம் என்பது புயல் நிவாரண நிதியில் ஒரு துளி மட்டுமே என்றுக்கூறிய அண்ணாமலை, அவர்கள் களத்தில் இறங்கி வந்தால் தான் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், கூலி வேலை செய்பவர்கள் கூட களத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பதாகவும் கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com