”காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்ற பேச்சிற்கே இடமில்லை” - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!

காவிரி நதி நீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்றே பேச்சிற்கே இடமில்லை என தமிழக நீர்வளர்த்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காவிரி நதி நீர் விவகாரத்தில் பல ஆண்டுகளாக பேசியும் பலனில்லை என்பதால் தான் நடுவர் மன்றத்தை நாடினோம். எனவே, இனி பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்றும், இந்த விவகாரத்தில் இனி உச்சநீதிமன்றம் தான் முடிவு செய்யும் என்றும் கூறினார். 

தொடர்ந்து பேசியவர், காவிரி நீர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக ஆக்கப்பூர்வமான வாதங்களை சட்டரீதியாக முன்வைக்கப்படும் என்றும், காவிரி நதிநீர் விவகாரத்தில் இரு மாநில பேச்சுவார்த்தையோ, பிரதமர் தலையிடலோ தேவையில்லை என்றும், உச்ச நீதிமன்ற வழக்கிற்கு பிறகு தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும், தமிழக எம்பிக்கள் தண்ணீர் கோரி மத்திய அமைச்சரை சந்தித்ததை போல், கர்நாடக முதலமைச்சர் மற்றும் எம்.பி.க்களை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com