வருவாய் துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

அந்தியூர் அருகே வருவாய் துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வருவாய் துறையை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்திற்குட்பட்ட பகுதியில் 63 குடும்பத்தினர் தங்களுக்கு பட்டா வேண்டி வருவாய்த் துறைக்கு பலமுறை விண்ணப்பித்தும், நேரில் மனு கொடுத்தும் உள்ளனர். இந்த நிலையில், பொதுமக்களின் மனுக்கள் மீது வருவாய் துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் குருவரெட்டியூர் கிராம நிர்வாக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com