டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குளறுபடிகள்... இன்று ஆலோசனை!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் குளறுபடிகள்... இன்று ஆலோசனை!!!

கடந்த வாரம் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) முனியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானதில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் சர்ச்சைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் தீர்வுகள் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் சட்டசபையில் நிதியமைச்சர் அறிவித்த புதிய தேர்வு நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com