குற்றச்செயல்களை தடுக்க, சென்னையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து!

குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் துரைப்பாக்கம் போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் துரைப்பாக்கம் போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.  குறிப்பாக குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சத்தை போக்கும் வகையிலும், குற்றச் செயல்களை தடுக்கும் வகையிலும் துரைப்பாக்கம் போலீசார் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

பெருங்குடி கல்லுக்குட்டை, சீவாரம், பெருங்குடி, துரைப்பாக்கம் ஓஎம்ஆர் சாலை, கெனால் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் துரைப்பாக்கம் ரோந்து போலீசார் கையில் துப்பாக்கியுடன் போக்குவரத்து விதிமுறையை கடைபிடிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிந்தவாறும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com