சட்டப்பேரவையில் இன்று....!!

சட்டப்பேரவையில் இன்று....!!

சட்டப்பேரவையில் இன்று முதல் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இந்த மாதம் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் குறித்த விவாதம் நேற்றுவரை நடைபெற்றது.  இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 

இந்த நிலையில்,  இன்று முதல் அரசு துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.  இன்று காலை நடக்கும் கூட்டத்தில் நீர்வளத் துறை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்க உள்ளது.  மாலை 4 மணிக்கு போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com