சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஓணம் பண்டிகையொட்டி சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஈடுசெய்யும் வகையில், செப்டம்பா் 2 ஆம் தேதி முழு பணி நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழ்நாடு - கேரள எல்லையான கோவை மாவட்டத்திலும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com