செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சோகம்..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சோகம்..!  ஒரே  குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி..!

மாமல்லபுரம் அருகே அரசு பேருந்தும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பெண் குழந்தை மூன்று பெண்கள் ஓட்டுனர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலி.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த மணமை கிழக்கு கடற்கரை சாலையில் சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற அரசு பேருந்து மீது எதிர்திசையில் வந்த ஆட்டோ மோதியதில் ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண் குழந்தைகள் மூன்று பெண்கள் ஆட்டோ ஓட்டுனர் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசிங்கி உயிர் இழந்துள்ளனர்.

இந்நிலையில்,  சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோவில் பயணித்த நபர்கள் சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கோவிந்தன் அவரது மனைவி அமுலு அவரது தயார் காமாட்சி, மற்றும்,  கோவிந்தனின் மூத்தமகள் சுகன்யா,  சுகனியாவின் 2 மகள்கள் என மொத்தம் 6 பேர் ஆட்டோவில் பயணித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் மூத்த மகள்  சுகன்யாவை பார்ப்பதற்காக கடப்பாக்கம் சென்று கடபாக்கத்தில் இருந்து சென்னை திரும்போது மாமல்லபுரம் அடுத்த மணமை பகுதியில் பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். 

அதனைத் தொடர்ந்து தற்பொழுது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் விசாரணை மேற்கொண்டதில் ஆட்டோவை அதிவேகமாக ஓட்டியதே விபத்து காரணம் என தெரிவித்தார்.

இந்நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com