நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு... ரெயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு...

கோவையில் ரெயில் மோதி 3 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம், பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சை பதற வைக்கும் நிகழ்வு... ரெயில் மோதி 2 குட்டிகள் உள்பட 3 காட்டு யானைகள் உயிரிழப்பு...

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் வசித்து வருகின்றன. அதுவும் கேரளா எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மதுக்கரை, வளையாறு உள்ளிட்ட வனப்பகுதி, அதிகளவு யானைகள் வசிக்கும் இருப்பிடமாக உள்ளது. 

இந்நிலையில், மதுக்கரை வனச்சரகம் நவக்கரை அருகே 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை, 2 குட்டி யானைகள் ஆகியவை, ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளன. அப்போது மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில், அந்த 3 யானைகள் மீதும் மோதியது. இதில் 3 யானைகளும் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தன.

இந்த வனப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட 30 கிலோ மீட்டர் வேகத்தை விட, அதிக வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுவதே, யானைகள் மீது ரெயில் மோத காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்த பகுதியில் மெதுவாக செல்லும்படி, ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com