“உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” - சென்னை உயர்நீதிமன்றம்

“உதயநிதி, சேகர்பாபு மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” - சென்னை  உயர்நீதிமன்றம்

சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர் பாபு ஆகியோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து இருந்திருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திராவிட கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காட்டை சேர்ந்த மகேஷ் கார்த்திகேயன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், எந்த மதத்திற்கு எதிராக பேசுவதற்கும் நீதிமன்றம் அனுமதிக்காது என்று கூறினார்.

அதேவேளையில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது  நடவடிக்கை எடுக்காமல் விட்டது காவல்துறையினர் தங்களுடைய கடமையை புறக்கணித்து போன்றது என்றும் கருத்து தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com