"10ரூ சீப்பு இருந்தா போதும், நானே சீவிக்கொள்வேன்" அமைச்சர் உதயநிதி பதிலடி!!

"10ரூ சீப்பு இருந்தா போதும், நானே சீவிக்கொள்வேன்" அமைச்சர் உதயநிதி பதிலடி!!

சாமியார் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன் எனவும் கவலைப்படவும் மாட்டேன் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல எனவும் அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

அவரது கருத்துக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்தும், தீயிட்டு கொழுத்தியும், தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் பரிசு கொடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி, இது குறித்து, "சனாதனம் குறித்து நான் பேசியதில் எந்த தவறும் இல்லை. உத்தர பிரதேச மாநில சாமியார் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சமாட்டேன், கவலைப்படவும் மாட்டேன். 10 ரூபாய் சீப்பு இருந்தால் போதும், எனது தலையை நானே சீவிக்கொள்வேன்" என பதிலளித்துள்ளார்.

மேலும், " நீ சாமியார் தானே? உன்னிடம் அப்படி 10 கோடி இருக்கும்? நீ ஒரிஜினல் சாமியாரா, இல்லை டூப்ளிகேட் சாமியாரா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com