”மத்திய அரசு போல் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக ஈடுபடாது” - கனிமொழி

மத்திய அரசு பாஜகவை போல், திமுக பழி வாங்கும் நடவடிக்கை எடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்துள்ளனர். அதேபோன்று தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கனிமொழி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்; நீதி, நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அமலாக்கத் துறை அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

தொடர்ந்து பேசியவர், மத்திய அரசு போல் திமுக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்காது என குறிப்பிட்ட கனிமொழி, பாஜக மீதும் பாஜக நிர்வாகிகள் மீதும் கணக்கு தணிக்கை அறிக்கையில் முன் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை அண்ணாமலை பதிலளிக்கவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com