"பெரியாரின் கைத்தடி, அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாது": வெங்கடேசன் எம்.பி ட்வீட்!

"பெரியாரின் கைத்தடி, அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாது": வெங்கடேசன் எம்.பி ட்வீட்!

சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வேலியிட்டுள்ள அறிக்கைக்கு, வெங்கடேசன் எம்.பி தனது த்விட்டேர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரும் 28ம் தேதி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. அன்று, தமிழ் நாடு ஆளுநர் ஆர். என். ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டமளிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகம் சார்பாக சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, "பெரியார் பல்கலைக்கழகத்தின் 21-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வேந்தர் மற்றும் மேதகு ஆளுநர் அவர்களின் தலைமையில் 28.06.2023 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. அச்சமயம், பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் கருப்பு நிறம் அல்லாத உடைகளை அணிந்து வருவதை உறுதி செய்யுமாறும், கைபேசிகள் எடுத்து வருவதை தவிர்க்குமாறும் சேலம் மாவட்ட காவல் துறையினர் அறிவுறுத்தலின் படி கேட்டுக்கொள்ளப் பணிக்கப்பட்டுள்ளேன்" எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,  சு. வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்து, தனது  ட்விட்டர் பக்கத்தில், பதிவிட்டுள்ளார். 

அதில், கூறியிருப்பதாவது," ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்கள் கருப்பு நிறஆடை அணிந்து வரக்கூடாதென்று  சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோல, பெரியாரின் கைத்தடி, அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும், காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com