நாம் தான் அதிமுகவிற்கு வாரிசு.... எடப்பாடி பழனிச்சாமி..!!

நாம் தான் அதிமுகவிற்கு வாரிசு.... எடப்பாடி பழனிச்சாமி..!!

முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றிய எஸ்.டி சோமசுந்தரம்  நூற்றாண்டு விழா சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது.  இந்த நூற்றாண்டு விழாவில்  எஸ்.டி சோமசுந்தரம் அவர்களின் சிலை திறப்பு மற்றும் அவருடைய வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு, எஸ்.டி.எஸ் அறப்பணி அறக்கட்டளை துவக்கம், சகுந்தலா சோமசுந்தரம் பெயரில் கட்டிட திறப்பு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சி பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  மேலும் நிகழ்ச்சியில் வி.ஐ.டி பல்கலைகழக வேந்தர் ஜி விஸ்வநாதன் , அதிமுக  கழக அமைப்புச்செயலாளர் ஆதி ராஜா ராம் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உருப்பினர் இரா. நல்லக்கண்ணு ,தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி கே வாசன் , தமிழ் பேரவை தலைவர் பல நெடுமாறன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் அண்ணாவின் பேரன் மலர்மன்னன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
 
அதனை தொடர்ந்து இந்த விழாவில் எடப்பாடி பழனிச்சாமி எஸ்.டி சோமசுந்தரம்  சிலையை காணொளி மூலம்  திறந்து வைத்தார்.  மேலும் எஸ்.டி சோமசுந்தரம் வாழ்க்கை வரலாறு நூலை எடப்பாடி பழனிச்சாமி  வெளியிட்டார்.  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஒரு மனதாக  தேர்வு செய்யப்பட்ட பிறகு எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற முதல் நிகழ்ச்சி எஸ்.டி சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவாகும்.

அதனைத் தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்ஜிஆர் -க்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்டி சோமசுந்தரம் எனவும் 34 வயதில் எடப்பாடி தொகுதியில் சேவல் சின்னத்தில் முதல் வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தார்.  மேலும் உழைப்பாளர்கள் நிறைந்த இயக்கம் அதிமுக இயக்கம் தான் எனவும்  உழைப்பாளர்களால் உயர்ந்த கட்சி அதிமுக எனவும் கூறினார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியில் இருக்கும் போது ஏழை மக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.  19 வயதில் கல்லூரியில் படித்து கொண்டு இருக்கும் போது தான் எம்.ஜீ.ஆர் ரசிகர் எனவும் 
எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா இருவருக்கும் வாரிசு இல்லை நாம் தான் அதிமுகவிற்கு வாரிசு எனவும் தெரிவித்தார்.

மேலும் எஸ்.டி சோமசுந்தரம் சிலை திறந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது எனவும் அதிமுக கழகத்தை காப்போம் மக்களையும் காப்போம்  எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com