சட்டப்படிதான் கூடத்திற்கு சீல் வைத்தோம் - கரூர் ஆட்சியர்

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கரூர் மாவட்டம் சுங்க சாவடி அருகே இயங்கி வந்த விநாயகர் சிலை கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சுங்கசாவடி பகுதியில் வடமாநில தொழிலாளர்களால் செயல்பட்டு வந்த விநாயகர் சிலை தயாரிக்கும் கூடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து பல லட்சம் முதலீடு செய்து விநாயகர் சிலைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை சமாதானம் செய்த ஆட்சியர், பசுமை தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி,  வேதிப்பொருட்களால் விநாயகர் சிலைகள் செய்யப்படுவதாக மண்பாண்ட தொழிலாளர்கள் புகார் தெரிவித்ததாக கூறினார். இதையடுத்து சட்டப்படிதான் கூடத்தை சீல் வைத்ததாக தெரிவித்தார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com