முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்தது பாலியல் வன்கொடுமை அல்ல..! வழக்கின் பிரிவை மாற்ற நீதிபதி உத்தரவு.! 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்தது பாலியல் வன்கொடுமை அல்ல..! வழக்கின் பிரிவை மாற்ற நீதிபதி உத்தரவு.! 

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் செய்தது பாலியல் வன்கொடுமை அல்ல என்றும் இருவரும் விருப்பத்துடன் பழகியுள்ளனர் என்றும் நீதிபதி கூறியுள்ளார். 

நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் சாந்தினி. இவர் சில நாட்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த ஒரு புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அளித்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி உடல் உறவு வைத்து கொண்டதாகவும் கூறினார்.

மேலும் 5 வருடங்கள் கணவன் மனைவி போல சேர்ந்து சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், இதனால் 3 முறை, கருக்கலைப்பு செய்தாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுத்து, கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என புகாரில் தெரிவித்திருந்தார்.

துணை நடிகை அளித்த புகாரின்பேரில், அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தனிப்படை அமைத்து மணிகண்டனுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டினர். இதனை கண்டு அஞ்சிய முன்னால் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவானார். மணிகண்டன் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ஏற்கெனவே நிராகரித்த நிலையில்,பெங்களூரில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை  தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

இதன் பின் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் மணிகண்டனை போலீசார் ஆஜர்படுத்தினார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மணிகண்டனும், சாந்தினியும் விருப்பத்துடன் பழகியுள்ளனர். எனவே இதனை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என்று தெரிவித்தார். மேலும் மணிகண்டன் மீது பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை என்ற வழக்கின் பிரிவை மட்டும் மாற்றும்படி கூறிய  நீதிபதி ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com