ஆண்மை ஒழிந்தால் தான் பெண் விடுதலை கிடைக்கும்...!!!

ஆண்மை ஒழிந்தால் தான் பெண் விடுதலை கிடைக்கும்...!!!

இட்லிக்கும்,சட்னிக்கும் வரி என்று தான் மோடி அரசு ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறது. பெண்களுக்கு தேவைப்படுகின்ற மின்இயந்திரங்கள் அனைத்தும் அரசு தர வேண்டும்.
வார்டு உறுப்பினராக வரவே வக்கில்லை இதில் வாய்க்கு ஒன்னும் கொறச்சல் இல்லை என சீமானை மேற்கோள் காட்டி பேசிய தமுஎகச சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி.

மகளிர் தினம்:

சென்னையில் உள்ள கே.கே நகரில் பெண்களின் உரிமைகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மகளிர் தினம் பொதுக்கூட்டம் மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில் மக்களிசை பாடகர் மகிழினி மணிமாறன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கததின் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

இரண்டு முறையில்:

பெண்ணுடைய வாழ்க்கை ஒரு வட்டம் என கவிஞர் அழகாக சொல்லிருப்பார் எனவும் வீட்டில் அப்பா சட்டம்,அம்மா காவல்காரி,மூளை சலவைக்காக கல்வி,தாலியுடன் கணவன், மீண்டும் அடிமையாக்க வயிற்றில் பிள்ளை இதுதான் பெண் வாழ்க்கை எனவும் பேசினார் சுந்தரவள்ளி.  மார்ச் 8 மகளிர் தின கொண்டாட்டம் இல்லை எனக் கூறிய அவர் உழைக்கும் பெண்களை உயர்ந்து பார்க்கும் நாளாக அதை பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.  மேலும் பெண்கள் கருத்தியல்,பாலியல் என்ற இரண்டு முறையில் சுரண்டப்படுக்கிறார்கள் எனவும் கூறினார்.

பால் வேறுபாடு:

ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என்பதே இன்றைய சமுதாயம் எனவும் ஆண் வெற்றி பெற்றால் உழைப்பால் பார்ப்பார்கள், அதே பெண்கள் வெற்றி பெற்றால் அதனை நிறத்தாலும் உடலாலும் தான் என்ற எண்ணம் தவறானது எனக் கூறிய சுந்தரவள்ளி பெண் உடலை வைத்தே கட்டமைத்ததால் இன்றும் அவல ஏற்படுவது மட்டுமல்லாமல் திருமணத்திற்காகவே பெண் வளர்க்கப்படுகிறாள் எனவும் கூறினார்.  ஆண்,பெண் பால் வேறுபாடு வேற,பாலின வேறுபாடு ஆபத்தானது எனவும் ஆண்மை ஒழிந்தால் தான் பெண் விடுதலை கிடைக்கும் என பெரியார் கூறினார் எனவும் தெரிவித்தார்.

பச்ச மட்டை:

வார்டு உறுப்பினராக வரவே வக்கில்லை எனவும் இதில் வாய்க்கு ஒன்னும் கொறச்சல் இல்லை என சீமானை குறிப்பிட்டு பேசினார்.  மேலும் தமிழ்நாட்டில் யாருக்காவது ரோஷம் வந்து பச்சமட்டை எடுத்து சாத்தினால் அன்று சீமானுக்கு பச்ச மட்டையின் வகையறா தெரியும் எனவும் பெண்களும், ஆண்களும் சேர்ந்து பயணித்தால் தான் நம் நாட்டிற்கு எதிரான பாசிசத்தை எதிர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com