சட்டப்பேரவையில் உதயநிதியின் முதல் பேச்சு...உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பேசியது என்ன?

சட்டப்பேரவையில் உதயநிதியின் முதல் பேச்சு...உலகக்கோப்பை போட்டிகள் குறித்து பேசியது என்ன?

சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், உலகக்கோப்பை கபடிப் போட்டியை தமிழ்நாட்டில் நடத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது முதல் பதிலை பதிவு செய்துள்ளார்.

எம்எல்ஏ செல்வராஜ் கேள்வி :

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் இன்று கூடியது. தொடர்ந்து வினாக்கள் விடைகள் நேரத்தில், உலகக்கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக எம்எல்ஏ செல்வராஜ் கேள்வியெழுப்பினார்.

உதயநிதி பதில்:

இதற்கு சட்டப்பேரவையில் முதன்முதலில் பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கபடி, சிலம்பம்  ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் ஜுன் மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, உலகக்கோப்பை கபடிப்போட்டி நடத்துவது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும், தமிழ்நாட்டில் நடத்துவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உதயநிதி கூறினார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com