விளையாட்டு போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்...!!

விளையாட்டு போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும்...!!

சென்னை கீழ்ப்பாக்கம் ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு துறை மற்றும் சமூக சேவையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கலந்து கொண்டு சிறப்பு விருதுகளை வழங்கினார். 

விருதுகள் வழங்கிய பின் பேசிய  ரோட்டரி சங்கத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன், ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்துள்ளோம் எனவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த ஒரு சிறுவனை முழுமையாக மீட்டு அவருக்கு மருத்துவ உதவிகளை அனைத்தும் செய்துள்ளோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை எங்களது சங்கத்தின் சார்பில் செய்து தரப்படுகிறது எனவும் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சமிதா சாருமதி, மாநில மாவட்ட மற்றும் உலக அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன் என்பது எனது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனவும் இது போன்ற முன்னணி சங்கங்கள் கிராமபுறங்களில் உள்ள விளையாட்டு போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களின் சுமார் 50க்கும் மேற்பட்டோருக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com