ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் ரயில் மறியல்

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் ரயில் மறியல்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததற்காக காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் விதித்தது அதன் தொடர்ச்சியாக தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இளைஞர் காங்கிரஸ் ஆர் இன்று திருச்சியில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இளைஞர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் லெனின் பிரசாத் தலைமையில் 70-க்கும் மேற்பட்டோர் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஜனசதாப்தி விரைவு ரயில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை துறையில் இருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூர் செல்ல வேண்டிய ரயில் திருச்சிக்கு 5 மணிக்கு வந்தது. 5.10 க்கு புறப்பட வேண்டிய அந்த ரயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர் அதனையடுத்து சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் மறியல் போராட்டத்தின் போது ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com