அதிகாலையில் பணிக்கு சென்ற இளைஞர்...மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு!!

அதிகாலையில் பணிக்கு சென்ற இளைஞர்...மழைநீர் கால்வாய் பள்ளத்தில் விழுந்து உயிரிழப்பு!!
Published on
Updated on
1 min read

சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி  விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் ராமகுணா(22). இவர் மற்றும் இவரது நண்பர் மதிவாணன்(24), இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். 

வழக்கம் போல், நேற்று  இரவு நேர பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் பூந்தமல்லி நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் எதிர் திசையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி சர்வீஸ் சாலையில் மழைநீர் கால்வாய் காக தோண்டப்பட்டு, கம்பிகள் கட்டப்பட்டு இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ராமகுணா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார் மற்றும் மதிவாணன் பலத்த காயமடைந்தார். 

இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற பொது மக்கள் மதிவாணனை மீட்டு பூந்தமல்லி உள்ள அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிதனர். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீ சார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இறந்து போன ராமகுனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வீஸ் சாலையில் மின்வாரிய பணிக்காக பள்ளம்  தோண்டப்பட்டு தடுப்புகள் இருந்த நிலையில், அதில் இடித்து நிலை தடுமாறி, மழை நீர் கால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளோடு தவறி விழுந்து ஒருவர் இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com