மீண்டும் மீண்டுமா.....? நேருக்கு நேர் மோதிய சரக்கு ரயில்கள்!

மீண்டும் மீண்டுமா.....? நேருக்கு நேர் மோதிய சரக்கு ரயில்கள்!

மேற்குவங்கத்தின் பாங்குராவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பெட்டிகள் தடம் புரண்டது. 

மேற்குவங்கத்தின் பாங்குரா மாவட்டம் ஓண்டாகிராம் ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயில் மீது, சிகப்பு விளக்கு சிக்னலை கவனிக்காமல் மற்றொரு சரக்கு ரயில் சென்று நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. 

இந்த விபத்தில், இரு ரயில்களிலும் அடுத்தடுத்து 8 பெட்டிகள் தடம்புரண்ட நிலையில், என்ஜின்கள் இரண்டும் கடும் சேதமடைந்தன. சரக்கு ரயில்கள் விபத்துக்குள்ளானது என்பதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், ஓட்டுநர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

தொடர்ந்து மித்னாபூர், பாங்குரா, புருலியா உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 14 ரயில்சேவை ரத்து செய்யப்பட்டதுடன், 3 ரயில்கள் தடம் மாற்றப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வேதுறை அறிவித்துள்ளது.  

இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்துக்கான தெளிவான காரணம் தொடர்பாக சோதனை மேற்கொண்டு வரும் நிலையில், சீரமைப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 2ம் தேதி ஒடிசாவின் பாலசோரில் மேற்குவங்க ரயில் உட்பட 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || வாக்னர் தலைவர் மீதான வழக்குகள் கைவிடப்படும்: ரஷ்ய அதிபர் மாளிகை கிரெம்ளின்!