வருது வருது.. விலகு விலகு.. குடியிருப்புப் பகுதியில் அதிவேகத்தில் ஓடிச்செல்லும் காண்டாமிருகம்... வைரல் வீடியோ!!

வருது வருது.. விலகு விலகு.. குடியிருப்புப் பகுதியில் அதிவேகத்தில் ஓடிச்செல்லும் காண்டாமிருகம்... வைரல் வீடியோ!!

காண்டாமிருகம் ஒன்று பரபரப்பான குடியிருப்புப் பகுதியில் அதிவேகத்தில் ஓடிச்செல்லும் வீடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐஎஃஎஸ் அதிகாரியான சுசந்தா நந்தா என்பவர் இதுதொடர்பான வீடியோவை தனது இணையப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காட்சிகளின்படி, ஒரு காலியான தெருவில் புகுந்த காண்டாமிருகம் முதலில் நடக்கத் தொடங்கி, பின்னர் ஆக்ரோஷமாக ஓட ஆரம்பிக்கும்.

அதனைக் கண்டவுடன் வீதியில் இருந்த ஒருசிலர் அலறியடித்துக்கொண்டு ஓடியதும் அதில் பதிவாகியிருக்கும். அதில் கடைசியாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் வேகமாக வந்த காண்டாமிருகத்தை பார்த்ததும் ஆட்டோவா முக்கியம் தனது முக்கியம் என ஓடிய காட்சிகளும் பதிவாகி இருக்கும். இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் தங்கள் இணையப்பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com