"வலி வந்து அழுத்துது" மாரிமுத்துவின் வீடியோ வைரல்!

"வலி வந்து அழுத்துது" மாரிமுத்துவின் வீடியோ வைரல்!

இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து  இன்று காலை தொலைக்காட்சித் தாெடருக்கு டப்பிங் பேசிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு வந்து இறந்துள்ளார். அதட்டும் குரல் திடகாத்திரமான உடல் இவைதான் மாரிமுத்துவின் அடையாளம். தமிழ்நாட்டின் கிராமங்களில் இருக்கும் பெரும்பாலான அப்பாக்களை அப்படியே உரித்து வைத்திருந்தார், மாரிமுத்து. இவரெல்லாம் இப்படி திடீரென இறப்பாரா? என கேட்டுகும் அளவிற்கான தோற்றத்தில் இருந்தவர் திடீரென இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ராஜ்கிரணின் அரண்மனைக்கிளி படத்தில் துணை இயக்குநராக இருந்தவர், மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கியவர். யுத்தம் செய் படத்தில் அறிமுகமான இவர் பரியேரும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம், கொம்பன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து உள்ளார். எனினும் இவை எல்லாம் கடந்து அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாப்பதிரத்தில் நடித்ததுதான். இந்த தொடரின் மையக்கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். இதில் இவர் பேசிய வசனங்களும் இவரது நடிப்பும் அனைவரையும் ஈர்த்தன. இந்நிலையில் இவரது இழப்பு பேரிழப்பாக இருந்துள்ளது. 

இதனையொட்டி பல்வேறு பிரபலங்களும் நேரிலும் சமூக வலைதளங்களில் தங்களது இரங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இவர் எதிர்நீச்சல் தொடரில் பேசிய வீடியோவை இணையதளவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.  

அந்த வீடியோவில், "வலி வந்து அழுத்துது, அப்பப்போ வருது... அப்பப்போ வலி வந்து  ஏதோ எனக்கு எச்சரிக்கை பண்ணுதோனு தோனுது..." என அவர் பேசிய வசனத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக்கி வருகின்றனர். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com