மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

மறைந்த நடிகர் மாரிமுத்துவின் இழப்பிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..!

மறைந்த திரைப்பட இயக்குநர் மற்றும் குணச்சித்திர நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார்.  அவரது இழப்பிற்கு பல திரைத்துறை  பிரபலங்களும் அரசியல்வாதிகளும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,  தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது  X  பதிவில் இரங்கலை பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், 

"திரைப்பட இயக்குநரும், நடிகருமான அண்ணன் மாரிமுத்து அவர்களின் மரணம் அதிர்ச்சியையும், மன வேதனையையும் தருகிறது. அவருடைய மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள்,  திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன்",  என குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனது பதிவில், 

" இயக்குநர், நடிகர் திரு.மாரிமுத்துவின் மரணச்செய்தி
இதயத்தில் இடி என விழுந்தது..
துயரம் கவ்வியது..
கண்ணீர் கலங்கியது..
வேதனை உள்ளத்தில் பரவியது..
அதிர்ச்சியில் உறைகிறேன்..
ஆற்றொண்ணா துயரத்தில் கரைகிறேன்...! " 

என தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து,  தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்த மாரிமுத்துவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"பிரபல நடிகரும், இயக்குநனருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.அவரது திடீர் மறைவு திரை உலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அவருடைய இழப்பு  திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.

நடிகர் மாரிமுத்துவை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்". 

இவ்வாறு தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com