நீலப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டப் பள்ளத்தாக்கு... வைரலாகும் வீடியோ...

ஜப்பானின் பள்ளத்தாக்கு ஒன்றில் நீல நிற பூக்கள் பூத்துக் குலுங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டப் பள்ளத்தாக்கு... வைரலாகும் வீடியோ...
Published on
Updated on
1 min read

ஜப்பானில் பொதுவாக வசந்த காலத்தை பற்றி சிந்திக்கும் போது பெரும்பாலான மக்கள் செர்ரி மலர்களைப் பற்றி நினைக்கிறார்கள். இதில் தற்போது வசந்த காலத்தை நினைவு கூறும் விதமாக பெரும்பாலான மலைப் பரப்புகளில் நீல நிற பூக்கள் பூத்துள்ளன.

இந்த பூ தாவரம் நெமோபிலா அல்லது குழந்தை நீலக் கண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜப்பானின் மிகவும் சிற்ப்பானது சகுரா எனப்படும் செர்ரி பூக்கள் தான். அந்த செர்ரி பூக்களைத் தாண்டி தற்போது இந்த நீல நிற பூக்கள் மக்கள் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com