சைவ பிரியர்களா? அய்யோ பாவம். அசைவ பிரியர்களா? அடிச்சது ஜாக்பாட்..! பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசமாம்.!

சைவ பிரியர்களா? அய்யோ பாவம். அசைவ பிரியர்களா? அடிச்சது  ஜாக்பாட்..!    பிரியாணி வாங்கினால் தக்காளி இலவசமாம்.!

மன்னார்குடியில் சைவ பிரியர்களை கதிகலங்க வைத்த பக்கெட் பிரியாணி கடையின் அறிவிப்பு: அசைவ பிரியர்களின் குடும்பங்களுக்கு அடித்த ஜாக்பாட் அறிவிப்பு மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தக்காளியின் விலை சதம் கண்ட நிலையில் நாளுக்கு நாள் தக்காளி விலை குறித்த தகவல்கள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளன.  

தக்காளி குறித்து வாட்ஸ் அப்பில் மீம்ஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.  இது ஓருபுறம் இருக்க வியாபார நிறுவனங்கள் தங்களது பொருட்களை விற்க தக்காளி விலையை சாதகமாக பயன்படுத்தி மார்க்கெட்டில் இறங்கியுள்ளனர்.  

அந்த வகையில்,   திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்   உள்ள பிரபல தொப்பி வாப்பா அசைவ பிரியாணி கடையில் 5 முதல் 7 நபர் சாப்பிடக்கூடிய பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 கிலோ தக்காளி இலவசம் எனவும், 3 முதல் 5 நபர் சாப்பிடக்கூடிய பக்கெட் பிரியாணி வாங்கினால் ½ கிலோ தக்காளி இலவசம் என்ற அறிவிப்பு சைவ பிரியர்களை கதி கலங்க வைத்துள்ளது. 

ஆனால் அசைவ பிரியர்களுக்கு இத்தகைய தக்காளி இலவச அறிவிப்பு உற்சாகத்தை தந்ததோடு, பக்கெட் பிரியாணி கடை முன்பு குவிய தொடங்கினர்.

Related Stories

No stories found.
logo
Malaimurasu Seithigal Tv
www.malaimurasu.com