300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம்....!!!

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம்....!!!
Published on
Updated on
1 min read

ஆம்பூர் அருகே 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் தேவஸ்தானம் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும்  பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோயில் ஜீனோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கரிக்கோலம் விமான கலசங்களுடன் திருவீதி உலாவுடன் தொடங்கப்பட்டு மறுநாள் கோ பூஜை, வேத திவ்ய பிரபந்த பாராயணரம்பம், வாஸ்து ஹோமம், பூர்ணாஹூதி , முதல் இரண்டாம் ,மூன்றாம் கால யாக சாலை பூஜைகள், மகா சாந்தி திருமஞ்சனம், பெருமாள் திருவாராதனம் ,கும்பபெருமாள் புறப்பாடு அனைத்து விமானங்களுக்கும் மற்றும் ராஜ கோபுரத்திற்கும் மஹா சம்பிரோஸனம், மகாதீபாரதனை உள்ளிட்ட முக்கிய பூஜைகளை தொடர்ந்து கலச நீர் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கலச கோபுரத்திற்கு சிறப்பு பூஜை செய்து  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாலையில் திருக்கல்யானோத்ஸவம் தொடர்ந்து திருவீதி உற்சவம் நடைபெற்றது.  சுற்றுப்புறத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட  கிராமங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா முழுங்க சாமி தரிசனம் செய்தனர். பிறகு 2000 பேருக்கு கோயில் கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com