விஷச்சாராய விவகாரம்...! 'மெத்தனால்' சப்ளை செய்த 5 போ் கைது .....!

விஷச்சாராய விவகாரம்...!  'மெத்தனால்' சப்ளை செய்த 5 போ் கைது .....!
Published on
Updated on
1 min read

கடந்த சில நாட்களாகவே விஷச்சாராயம் அருந்தியதால் பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறிருக்க நாளுக்கு நாள் பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே வருகிறது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து ஏழு பேர் உயிரிழந்த விவகாரத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்ததால் அவர்கள் இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் இளைய நம்பி(45), என்பவர் மெத்தனால் சப்ளை செய்தது தெரியவந்தது. 

இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி அங்கு பணிபுரிந்த சதீஸ்(27), மணிமாறன்(27), கதிர்(27), உத்தமன்(31), ஆகிய ஐந்து பேரை செங்கல்பட்டு மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

மேலும் அந்த நிறுவனத்தில் சிறிதளவு மெத்தனால் இருந்ததையடுத்து சோதனைக்கு அதனை எடுத்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com