அதானி விவகாரம்: காங்கிரஸின் கேள்விகள் புத்தகமாக வெளியீடு!

அதானி விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் காங்கிரஸ் கட்சி எழுப்பிய 100 கேள்விகளை புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் மோசடி செய்து கோடிக்கணக்கில் பணத்தை ஈட்டியதாக ஹிண்டர்ன்பெர்க் ஆய்வு நிறுவனம் அதானி குழுமம் மீது குற்றம்சாட்டி கடந்த ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டது. இதை ஒட்டி அதானி குழுமத்தின் மீது நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் கோரியது. இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே அதானி விவகாரம் தொடர்பாக தினமும் ஒரு கேள்வியை பிரமருக்கு காங்கிரஸ் கட்சி எழுப்பி வந்தது.
இந்நிலையில் ஜனவரியில் இருந்து பிரதமரிடம் எழுப்பப்பட்ட 100 கேள்விகளை புத்தகமாக அச்சிட்டு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதற்காக டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இந்நூலை வெளியிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் மழைக்கால கூட்டத் தொடரிலும் அதானி விவகாரம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்படும் எனவும் அவர் பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.
सुप्रीम कोर्ट की कमेटी ने अपनी रिपोर्ट में 'Piquant' शब्द का इस्तेमाल किया।
— Congress (@INCIndia) June 1, 2023
कमेटी के कहने का अर्थ था कि SEBI ने पुराना नियम हटाकर गलत किया। यानी पहले Dilute हुआ, फिर Delete हुआ।
लेकिन इस नियम के हटने का एक ही लाभार्थी था- वो है अडानी।
: @Jairam_Ramesh जी pic.twitter.com/wLnWdlfT9F
இதையும் படிக்க:சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கம்...! முதலமைச்சர் கண்டனம்...!!